Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எண்ணெய் குழாய் அமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 05:42 GMT, Mar 25, 2017 | Published: 05:42 GMT, Mar 25, 2017 |
0 Comments
1305
This post was written by : Sylviya

ட்ரான்ஸ் கனடா நிறுவனத்தின் எக்ஸ். எல் எண்ணெய் குழாய் அமைப்பு திட்டத்திற்கு (XL pipeline) அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நியூயோர்க்கில் அமைக்கப்பட்டுள்ள ட்ரம்புக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு குறித்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள போதிலும் நிதி, உள்ளூர் அனுமதி பத்திரங்கள் மற்றும் சட்ட சவால்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த திட்டத்தின் மூலம், கனேடிய எண்ணெய் அகழ்வு பகுதிகளில் உள்ள குழாய்கள் அமெரிக்காவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா மறுப்பு தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் மூலம், அமெரிக்க வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் இத்திட்டம் உலக வெப்பமயமாதலை அதிகரிக்கச் செய்யும் எனவும் ஒபாமா விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg