Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி வடக்கிற்கு இடமாற்றம்

In
Updated: 08:16 GMT, Mar 27, 2017 | Published: 07:29 GMT, Mar 27, 2017 |
0 Comments
1373
icon_com
This post was written by : Ravivarman
17554334_922471794556856_5885399490529283858_n

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி இன்று (திங்கட்கிழமை) முதல் வடக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியாக கடமை புரிந்த இவர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்ற படை அதிகாரியாவார். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் தீவிரமடைந்து காணப்பட்ட டெங்குநோய் தொடர்பான பல செயற்திட்டங்களுக்கும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

இடமாற்றம் பெற்றுச் செல்லும் கட்டளைத்தளபதி மரியாதை நிமித்தம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையை ஆயரில்லத்தில் நேற்றையதினம் மாலை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இச்சந்திப்பில் மாவட்ட சிவில் சமுக உறுப்பினர்களும் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

17499074_922471787890190_253717008541693783_n 17522833_922471707890198_8531607734357959539_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg