Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தர்மசாலா ஆடுகளமே சிறந்தது: லோகேஷ் ராகுல்

In கிாிக்கட்
Updated: 08:17 GMT, Mar 27, 2017 | Published: 07:37 GMT, Mar 27, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Elakkiya
392771-lokesh-rahul-test-ton-700

அவுஸ்ரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா ஆடுகளமே மிகச்சிறந்த ஆடுகளம் என இந்திய துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இரண்டாம்நாள் ஆட்ட நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் லோகேஷ் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசில்வூட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. என்னுடைய டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சு இதுதான். துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சிறந்த ஆரம்பத்தை அதிக ஓட்ட எண்ணிக்கையாக மாற்றமுடியாது போனமை சற்று ஏமாற்றம் அளிக்கின்றது. எனினும் தனிப்பட்ட முறையில் எனக்கு இது மோசமான தொடர் அல்ல. நான் சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளேன்.

அதுதவிர அவுஸ்ரேலிய வீரர்களை சமாளிப்பது இலகுவல்ல. அனைத்து போட்டிகளிலும் அவர்கள் சவாலாக விளங்கினர். அவுஸ்ரேலிய அணியுடனான இந்த தொடரில் நாங்கள் விளையாடிய ஆடுகளத்திலேயே இதுதான் சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg