Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்முலா-1 முதற்சுற்றில் வெற்றியை பதிவுசெய்தார் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன்

In விளையாட்டு
Published: 07:58 GMT, Mar 27, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற போர்முலா-1 கார்ப்பந்தய முதல்சுற்றில் ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) வெற்றிபெற்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான போர்முலா-1 கார்ப்பந்தயம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிய நிலையில் முதல் சுற்றுப் போட்டி மெல்பேர்னில் நடைபெற்றது. 302.271 கிலோ மீற்றருக்கான முதற்சுற்றுப் போட்டியில் பத்து அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 24 நிமிடங்கள் 11 விநாடிகளில் கடந்த ஜேர்மனிய வீரர் செபஸ்டியன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹமில்டன் இரண்டாவது இடத்தையும் பின்லாந்து வீரர் வல்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த செபஸ்ரியன், “சம்பியன்ஷிப் சவாலுக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. புதிய தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தமை எமது அணியினருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான போர்முலா-1 கார்ப்பந்தய தொடரின் இரண்டாம் சுற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg