Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்துடனான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் : சீன பிரதமர்

In உலகம்
Published: 07:57 GMT, Mar 27, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Sylviya

நியூசிலாந்துடனான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் உலக பாதுகாப்பு பற்றிய பொருளியல் கொள்கை தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் எனவும் சீன பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள லீ கெக்கியாங், இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் பில் இங்லிஷ் (Bill English) உடன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர், குறித்த இரு தலைவர்களும் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் பாரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதல்தர நாடாக சீனா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க, கடந்த 2008ஆம் ஆண்டில் சீனாவுடன் சுதந்திர வர்த்தகத்தில் கைச்சாத்திட்ட முதலாவது நாடு எனும் பெருமை நியூசிலாந்தையே சாரும்.

சீனாவின் உலக ரீதியான அபிலாஷைகளுக்கு ஆரம்ப காலம் தொட்டு உதவி புரிந்து வரும் நாடாக நியூசிலாந்து உள்ளமையால் குறித்த உறவுகளை மேலும் வலுவடையச் செய்யும் பொருட்டு இந்த சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் குறித்த இரு நாடுகளும் அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg