Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலாபமீட்டும் நிறுவனமாக சதொச நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது: ரிசாத்

In இலங்கை
Updated: 08:24 GMT, Mar 27, 2017 | Published: 08:06 GMT, Mar 27, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Ravivarman
rishad307-300x244

லங்கா சதொச நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனமாக தற்போது மாற்றமடைந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்கும் வேளையில் சதொச நிறுவனம் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தின் களஞ்சியசாலைகளில் காலாவதியான பொருட்கள் தேங்கி காணப்பட்டன. பல வருடங்களாக உரிய கணக்கு ஆவணங்கள் பேணப்படவில்லை.

சதொச கிளை அலுவலகங்கள் முன்னர் வலயமைப்பாக இயங்கவில்லை. ஆனால், நாடளாவிய ரீதியில் பல கிளை அலுவலகங்கள் தற்போது அமைக்கப்பட்டு, பலமான வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கம் இதனை பொறுப்பேற்ற பின்னர் இலாபமீட்டும் நிறுவனமாக லங்கா சதொச மாற்றமடைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் சதொச கிளைகளின் மொத்த எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கப்படும்” என அமைச்சர் ரிசாத் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg