Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ அணியின் பெயர் மாற்றம்

In கிாிக்கட்
Updated: 11:45 GMT, Mar 27, 2017 | Published: 08:33 GMT, Mar 27, 2017 |
0 Comments
1948
This post was written by : Elakkiya

ஐ.பி.எல் பிரதான அணிகளில் ஒன்றான ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ (Rising Pune Supergiants) அணியானது ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்’ (Rising Pune Supergiant) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் மூடநம்பிக்கையை மாத்திரம் கொண்டு அணியின் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்று அணியின் செய்தித் தொடர்பாளர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நான்கு அல்லது ஐந்து வீரர்களின் மாபெரும் திறன்களை எமது அணியில் நாம் பாரத்திருந்தோம். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக நாம் தாயாராகிக் கொண்டிருந்த போது ஒரு சில வீரர்களை மாத்திரம் எதற்காக மாபெரும் திறனுடையவர்களாக கருதவேண்டும்? முழு அணியையும் மாபெரும் திறனுடையதாக கருதலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அணியின் பெயரை சூப்பர்ஜயன்ட் என்று மாற்றினோம்” என்று விளக்கமளித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐ.பி.எஸ் தொடரிற்காக ‘ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ்’ அணியில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது மாற்றம் இதுவாகும்.

முன்னதாக அணியின் தலைவர் மாற்றப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிய அணியாக சேர்த்துக் கொள்ளப்பட்ட ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி செயற்பட்டார். எனினும் இவ்வாண்டு தொடரில் அணித்தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டு அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg