Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிக்கோலா ஸ்ரேர்ஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பிரதமர் தெரேசா மே

In
Updated: 08:51 GMT, Mar 27, 2017 | Published: 08:17 GMT, Mar 27, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Sylviya
06

பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்வது குறித்து ஸ்கொட்லாந்து அறிவித்ததை தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜனை விரைவில் சந்திக்கவுள்ளார்.

நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரெக்சிற் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஒற்றுமையான தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் பிரதமர் மே பேச்சுவார்த்தை நடத்துவார் என அண்மையில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மே, ஸ்கொட்லாந்து இரண்டாவது கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சரியான தருணம் இதுவல்ல என தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, பிரெக்சிற் நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை தொழிற்கட்சி உறுப்பினர்கள் விரைவில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg