Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பில் நாளை வாக்கெடுப்பு

In
Updated: 09:10 GMT, Mar 27, 2017 | Published: 08:38 GMT, Mar 27, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Sylviya
07

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிடம் இருந்து வேறாக பிரிந்து செல்வது தொடர்பில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும் 2019ஆம் ஆண்டு வசந்த காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்தே மேற்குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதற்கு முன்னதாக ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என நிக்கோலா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், நிக்கோலாவின் கருத்து தொடர்பில் தெரேசா மே விளக்கம் அளித்திருந்த போது, ஸ்கொட்லாந்து இரண்டாவது கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துமாயின் அது பிரித்தானியாவை பலவீனமான நிலைக்கு தள்ளிச்செல்லும் என தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க,  நிக்கோலாவை பிரதமர் மே விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் குறித்த பேச்சுவார்த்தை பிரெக்சிற் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தும் வகையில் அமையக் கூடாது என ஸ்கொட்லாந்து அரச வட்டாரம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg