Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வெம்ப்லே மைதானத்தில் அஞ்சலி

In உதைப்பந்தாட்டம்
Published: 10:19 GMT, Mar 27, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Elakkiya

கடந்த வாரம் இடம்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு லண்டன் வெம்ப்லே மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் லிதுவேனியா கால்பந்து அணிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னதாக  அணி வீரர்களால் இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, பதில் மாநகர பொலிஸ் ஆணையாளர் கிரேக் மேக்கி, லண்டன் மேயர் சித்திக் கான், கலாசார ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் கெரன் பிராட்லி மற்றும் கால்பந்து சபையின் தலைவர் க்ரேக் க்ளார்க் ஆகியோர் வெம்ப்லே மைதானத்தின் நடுவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 22 ஆம் திகதி கார் ஒன்றினால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டதில்  நால்வர் உயிரிழந்தனர். தாக்குதல்தாரியான காலிட் மசூட் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg