Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதல் சம்பவம்: மேலும் ஒருவர் கைது

In
Updated: 11:10 GMT, Mar 27, 2017 | Published: 10:24 GMT, Mar 27, 2017 |
0 Comments
1324
icon_com
This post was written by : Sylviya
08

வெஸ்ட்மின்ஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக மெட்ரோ பொலிற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட பர்மிங்ஹாமைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை  12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலே பிரித்தானியாவில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg