Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாக அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 11:01 GMT, Mar 27, 2017 | Published: 09:20 GMT, Mar 27, 2017 |
0 Comments
1314
This post was written by : Ravivarman

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விடயங்களில் அனைத்துப் பிரஜைகளும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இன்றையதினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விருந்துபசார நிகழ்வில், மாணவர்கள் மதுபானம் அருந்தியமை மற்றும் கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவர்கள் சிலர் பொரளை யஷோதரா கல்லூரிக்குள் அத்துமீறிப் பிரவேசித்தமை தொடர்பிலேயே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கங்கள் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர் கண்டிப்பாக அவதானம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg