Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள்: முஜிபுர் ரஹ்மான்

In இலங்கை
Updated: 11:15 GMT, Mar 27, 2017 | Published: 10:34 GMT, Mar 27, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Ravivarman
Mujeebur-Rahman

கொழும்பில் வேலைவாய்ப்பின்றி, போதைப் பொருள் விற்பனை போன்ற சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு மருதானை அஸ்ஸபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இளைஞர்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய கொழும்பில் தொழிற்பயிற்சி நிலையமொன்றினை நிறுவி மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய காரணத்தால் இவர்களுக்கு தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. தொழில் இல்லாத நிலையிலேயே இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்“ என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg