Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உ.பி-இல் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த இறைச்சி கடைகள் மூடல்: கடை உரிமையாளர்கள் போராட்டம்

In இந்தியா
Published: 10:31 GMT, Mar 27, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Shailu
beef

உத்தரபிரதேசத்தில் மாடுகளை வெட்டும் கூடங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உரிய அனுமதி பெறாமல் இயங்கி வரும் இறைச்சிக் கூடங்களை மூட முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் அசைவ உணவு விடுதிகள் என்பன மூடப்பட்டுள்ளன.

அத்தோடு, அரசின் உத்தரவால் இறைச்சி தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், அரசு பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மாடுகளை வெட்டுவதற்கு உரிமம் பெற்ற 41 கூடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான கூடங்கள் செயற்பட்டு வந்ததால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg