Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிக்குமாறு கோரி போராட்டம்

In இலங்கை
Updated: 10:49 GMT, Mar 27, 2017 | Published: 10:49 GMT, Mar 27, 2017 |
0 Comments
1213
This post was written by : Vithushagan

கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணையில் முகாம் அமைத்துள்ள ராணுவத்தினரை வெளியேறி காணியை கையளிக்குமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வட்டக்கச்சி விவசாய பண்ணை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கக்கோரி மகஜர் ஒன்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டதுடன், இப்போராட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் விவசாயிகள், சிவில் அமைப்புக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

unnamed (4) unnamed (5) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg