Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி: எர்டோகன் கடும் கண்டனம்

In ஐரோப்பா
Published: 11:36 GMT, Mar 27, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Sylviya

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தனது தலையை குறிவைத்து துப்பாக்கி ஒன்றை ஏந்தியிருப்பது போன்ற சுவரொட்டி ஒன்றை, சுவிட்ஸர்லாந்தின் பேர்ன் நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கொண்டு சென்றமை குறித்து எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த எர்டோகன், “இந்த விடயம் தொடர்பில் துருக்கி தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றின் போதே குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கருத்துக்கணிப்பிற்கு துருக்கி மக்களின் ஆதரவை பெறும் பொருட்டே இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் நடத்தப்படவுள்ள கருத்துக்கணிப்பில் ‘இல்லை’ என மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரி சுவிட்ஸர்லாந்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg