Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் உடன்படிக்கையில் ஆறு முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்: கீர் ஸ்டார்மர்

In
Updated: 12:12 GMT, Mar 27, 2017 | Published: 12:12 GMT, Mar 27, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Sylviya
12

தொழிற்கட்சியினால் பரிந்துரைக்கப்படும் ஆறு முக்கிய விடயங்கள் பிரெக்சிற் உடன்படிக்கையில் உள்ளடக்கப்படாத பட்சத்தில், பிரித்தானிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் குறித்த உடன்படிக்கைக்கு தொழிற்கட்சி ஆதரவளிக்காது என பிரெக்சிற் விடயங்களை கையாளும் நிழல் அமைச்சர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவை பேணும் வகையிலும் ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மூலம் பிரித்தானியா தற்போது அனுபவிக்கும் நன்மைகளில் குறைவேதும் ஏற்படாத வகையிலும் பிரித்தானிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் பிரெக்சிற் உடன்படிக்கை அமைய வேண்டும் என கீர் குறிப்பிட்டுள்ளதாக இன்று வெளியாகிய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை மறுதினம் (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே கீர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg