Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் ஒப்பந்தம்

In சினிமா
Updated: 12:16 GMT, Mar 27, 2017 | Published: 12:16 GMT, Mar 27, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Shailu
Vishnu Vishal

‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பின்னர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்திலும், பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்த பின்னர், ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளதாகவும், இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஷ்ணு ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாகவும், கௌதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தை, கௌதம் தன்னுடைய தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg