Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படும்: மே

In
Updated: 12:58 GMT, Mar 27, 2017 | Published: 12:58 GMT, Mar 27, 2017 |
0 Comments
1293
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதன் மூலம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த முடியும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு இன்று (திங்கட்கிழமை) ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே மேற்குறித்த கருத்தை மே தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள நகரங்களில் ஒன்றான East Kilbride இல் உரை நிகழ்த்திய மே, “பிரெக்சிற் மூலம் பிரித்தானியாவில் ஒன்றுமையை ஏற்படுத்தவே நான் முயல்கின்றேன்” என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் ஒன்றுமையை ஏற்படுத்தும் அதே சமயம், ஐரோப்பாவுடன் புதிய உறவொன்று ஏற்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது, உலக நாடுகளிடம் இருந்து விலகுவது என பொருள் படாது எனவும், மே சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்வது தொடர்பில், இரண்டாவது கருத்துக்கணிப்பு ஒன்று ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட வேண்டும் என நிக்கோலா தெரிவித்ததை தொடர்ந்தே, தெரேசா மே ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் நாளை மறுதினம் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg