Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பாகுபலி-2′ பட இசை வெளியீட்டு விழா: சிறப்புவிருந்தினராக ரஜினி – விஜய் பங்கேற்பு

In சினிமா
Updated: 12:26 GMT, Mar 27, 2017 | Published: 12:26 GMT, Mar 27, 2017 |
0 Comments
1907
icon_com
This post was written by : Shailu
Vijay-Rajini

ராஜமௌலி இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘பாகுபலி 2′

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ‘டிரைலர்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு, இது உலக அளவில் அதிகமாக பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

இந்நிலையில், ‘பாகுபலி-2′ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது.

இதனையடுத்து, தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதைதொடர்ந்து தமிழில் ஏப்ரல் 8ஆம் திகதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை நேரு அரங்கத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படகலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய சினிமா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg