Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்களை தேடும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை: ஆனந்தசங்கரி

In இலங்கை
Published: 13:11 GMT, Mar 27, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Varshini

காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு சிறிதேனும் இல்லையென தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 36 நாட்களை எட்டியுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் ஆனந்தசங்கரி மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடும் போது, சிறு குற்றங்களை செய்தவர்களே சிறையில் வாடுகின்றனர் என குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, அனைத்து அமைப்புகளும் ஒன்றுதிரண்டு போராடினால் மாத்திரமே காணாமல் போனோர், நில விடுவிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார்.

மாறாக ஐ.நா.வால் வழங்கப்பட்டுள்ள மேலும் இரண்டு வருட கால அவகாசத்தில் தமிழர்களுக்கு அரசாங்கம் எவ்வித நன்மைகளையும் மேற்கொள்ளப் போவதில்லையென ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg