Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் அருங்காட்சியகத்தில் 4 மில்லியன் பெறுமதியான நாணயம் திருட்டு

In உலகம்
Updated: 15:46 GMT, Mar 27, 2017 | Published: 15:41 GMT, Mar 27, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : elayathambi
_95340542_hi038715058

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 03.30 அளவில் ஜேர்மன் அருங்காட்சியகத்தில் தங்க நாணயம் ஒன்று திருடப்பட்டுள்ளது. சொக்கத் தங்கத்தினாலான இன் நாணயம் ஒரு மில்லியன் டொலர் முகப் பெறுமதி கொண்டது.

எலிசபத் மகாராணியின் முகம் கொண்ட இந்த கனடிய நாணயத்தின் சந்தைப் பெறுமதி 4 மில்லியன் டொலர்கள் (3.2 மில்லியன் பவுண்ஸ்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

100 கிலோ நிறையுடைய இன் நாணயம் முற்று முழுதாக 24 கரட் தங்கத்தாலானதாகும். பேர்லின் அருங்காட்சியகத்தில் இருந்து இன் நாணயம் இன்று அதிகாலை 3.30 அளவில் திருடிச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கும் துப்பாக்கிச் சன்னம் நுழையாத கண்ணாடிக் கூட்டினுள்ளும் வைக்கப்பட்டிருந்த இந்த நாணயத்தை திருடர்கள் எவ்வாறு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

தவிரவும் அரை மீற்றர் விட்டமும் 100 கிலோ நிறையமுடைய இதனை தனி ஒருவரால் எடுத்துச் சென்றிருக்க முடியாது எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg