Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பவேண்டிய காலம் வந்துவிட்டது: பொதுபல சேனா

In இலங்கை
Updated: 04:13 GMT, Mar 28, 2017 | Published: 02:00 GMT, Mar 28, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Ravivarman
pikku

தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பவேண்டிய காலம் தோன்றியுள்ளதை நாமும் நாட்டு மக்களும் நன்கு உணர்ந்துள்ளோம் என பொதுபலசேனா அமைப்பின் தலைமையில், ராவணா பலய, சிங்கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய சிங்கள அமைப்புக்கள் அரசாங்கத்தினை எச்சரித்துள்ளன.

நாராஹேன்பிட்டி அபயராம விஹாரையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) மேற்படி அமைப்பினை சேர்ந்த பிக்குகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள். இவர்கள் மேலும் தெரிவிக்கையில்-

“எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 15 பிக்குமார் சங்கங்களை திரட்டிக்கொண்டு தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு துரத்துவோம். நாட்டில் தற்போதுள்ள அரசியல் தலைமைத்துவங்கள் யார் என்பதே மக்களுக்கு சரியாகத் தெரியாதுள்ளது.

நாட்டின் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்பனை செய்கின்றனர். மறுபுறத்தில் வடக்கு கிழக்கிலுள்ள இராணுவம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், புலிகளும் தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களும் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

எனவே தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 15 பிக்குமார் சங்கங்களையும் ஒன்றிணைத்து, மக்களின் ஆதரவுடன் இந்த அரசாங்கத்தினை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg