Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமலை பார்வையிட வருபவர்களை தடுத்து நிறுத்தும் சிறைச்சாலைகள் திணைக்களம்!

In இலங்கை
Updated: 04:14 GMT, Mar 28, 2017 | Published: 02:21 GMT, Mar 28, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Ravivarman
vimaa

வாகன மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பார்வையிட வருபவர்களை மட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினமும் இவரைப் பார்வையிடுவதற்கு பெருமளவானோர் வருகை தந்துள்ளதாகவும், இதனையடுத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷான் டனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சமூகமளிக்க முடியும். அத்துடன் நாடாளுமன்ற சிறப்புரிமை பெற்றுள்ள எம்.பி.களும் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே பார்வையிட முடியும் எனவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பிணைமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உடல்நலக்குறைவால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg