Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்க்குற்ற விசாரணைகள் இனங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தும்: கோட்டாபய

In இலங்கை
Published: 03:08 GMT, Mar 28, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Ravivarman

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இலங்கையில் உள்ள இனங்களுக்கிடையில் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்குமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு  வழங்கிய செவ்வியிலேயே கோட்டா இதனைக் கூறியுள்ளார். குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

“சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் போன்ற விடயங்கள் தற்போது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், இலங்கையில் உள்ள இரண்டு இனங்களுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு சர்வதேசமும் ஐ.நா.சபையும் ஆதரவினை வழங்கியுள்ளன. இவ்விடயம் இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்தக் கூடியது. எனினும் பிரதான இரு இனங்களுக்கிடையில் மேலும் கசப்புணர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

அத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் மூலம், மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு இனங்களுக்கிடையே தொடர்ந்தும் பகை உணர்வுகள் அதிகரித்துச் செல்ல வாய்ப்பாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg