Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பரிசீலனை

In இந்தியா
Updated: 08:22 GMT, Mar 28, 2017 | Published: 04:49 GMT, Mar 28, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Shailu

டெல்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சரவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூடவுள்ள நிலையில் விவசாயிகளின் போராட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இதற்கிடையே தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் நாளுக்கு ஒரு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg