Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்நாட்டு வீரர்களுக்கும் உதவுவதற்கு தயார்: ஷேன் வோர்ன்

In கிாிக்கட்
Updated: 06:02 GMT, Mar 28, 2017 | Published: 05:39 GMT, Mar 28, 2017 |
0 Comments
1629
icon_com
This post was written by : Risha
shane

எந்நாட்டு சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பினும் அவர்களுக்கு உதவுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் குல்தீப் யாதவிற்கு பாராட்டு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கம் குறித்து அறிந்த விபரத்தை குல்தீப் யாதவ் தெரிவித்து இருந்தார். எனது மாணவனின் பந்துவீச்சு எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

அவருக்கு நான் எப்போதும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன். அத்தோடு, எந்நாட்டு சுழற்பந்து வீரராக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கான்பூரை சேர்ந்த 22 வயதான குல்தீப் யாதவ், முதல் டெஸ்டில் 68 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg