Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்ஸிக்கோவில் 45 இனந்தெரியாத சடலங்கள் கண்டெடுப்பு!

In உலகம்
Updated: 12:58 GMT, Mar 28, 2017 | Published: 05:56 GMT, Mar 28, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Sylviya
03

மெக்ஸிக்கோவின் தெற்கு மாநிலமான மொரேலொஸின் (Morelos) கல்லறையொன்றிலுள்ள புதைகுழியிலிருந்து, சுமார் 45 இனந்தெரியாத சடலங்களை தடயவியல் நிபுணர்கள் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் புதைக்கப்பட்டமையின் பின்னணியில் சில அதிகாரிகளும் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 45 சடலங்களும் தடயவியல் ஆயராய்ச்சி செய்யும் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை கண்டெடுக்கப்பட்ட புதைகுழியில் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து, காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது சொந்தங்களின் சடலங்கள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் குறித்த பகுதியில் கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த வருடம் மொரேலொஸில் உள்ள புதைகுழியொன்றிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட இனந்தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கது.

மெக்ஸிக்கோவின் மொரேலொஸ் எனும் பகுதியிலேயே அதிகளவான கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg