Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதி டெஸ்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா

In கிாிக்கட்
Published: 06:22 GMT, Mar 28, 2017 |
0 Comments
1464
icon_com
This post was written by : Risha

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி எட்டு விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

தர்மசாலாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணிக்கு 106 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த இலக்கை இலகுவாக கடந்து இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி தமது முதல் இன்னிங்சில், 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 111 ஓட்டங்களையும், மேத்யூ வேட் 57 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 117.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்று 32 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 63 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 60 ஓட்டங்களையும், புஜாரா 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் மற்றும் ஸ்டீவ் ஓ’கீஃபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி  53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதன்படி இந்திய அணிக்கு 106 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மெக்ஸ்வெல் 45 ஓட்டங்களையும், வேட் 25 ஓட்டங்களையும், ஹான்ட்ஸ்கோம்ப் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பில் யாதவ், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக மூன்றாவது நாளில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆட்ட நேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதன்படி இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில், இந்திய அணி வெற்றி இலக்கை இலகுவாக கடந்து தொரை 2:1  என்ற ரீதியில் தனதாக்கியது. போட்டியில் லோகேஷ் ராகுல் மற்றும் ரஹானே ஆகியோர் 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் பிரகாசித்த ரவீந்திர ஜடேஜா போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg