Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சிபேதமற்ற ஆதரவே நல்லாட்சிக்குத் தேவை: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 07:39 GMT, Mar 28, 2017 | Published: 06:12 GMT, Mar 28, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Ravivarman
myth

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் தமது நல்லாட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “சில மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் பூரணமாக ஆதரவளித்து வருகின்றனர். சிலர் ஆதரவளிக்கவில்லை. மேலும் சிலர் இடைநடுவில் இருக்கின்றனர்.

நல்லாட்சியினைக் கொண்டு மக்களுக்கான பூரணத்துவம் நிறைந்த சேவையினைச் செய்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. அத்துடன் கொடிய யுத்தத்திலிருந்து எமது நாட்டினை விரைவாக மீட்பதற்கு கட்சிபேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg