Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை கோரி விமல் போராடவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
Published: 06:19 GMT, Mar 28, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Varshini

தமக்கு பிணை வழங்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராடவில்லை என்றும், அரசின் பழிவாங்கல் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகவே போராடி வருகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை மஹிந்த உள்ளிட்ட பொது எதிரணியின் உறுப்பினர்கள் நேற்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்ச உயிரிழந்தால் மயானத்திற்குச் சென்று இறுதிக்கிரியை செய்ய தயாரென அமைச்சர் ஜோன் அமரதுங்க அண்மையில் கூறியிருந்தமை தொடர்பாக இதன்போது ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மஹிந்த, நாடு தற்போது போகும் போக்கில் விமல் மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவரும் மயானத்திற்கு செல்லவேண்டி ஏற்படுமென பதிலளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg