Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடு (இரண்டாம் இணைப்பு)

In இந்தியா
Published: 06:34 GMT, Mar 28, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Elakkiya

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தொகுதியில் அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  தரப்பில் மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மேற்படி முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணவிநியோகம் செய்கின்றார் தினகரன்! – ஓ.பி.எஸ் அணியினர் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பண விநியோகம் செய்வதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆர்.கே.நகரில் தனது அணி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்களிடம் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg