Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கான மைதானம் உறுதிசெய்யப்பட்டது

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:55 GMT, Mar 28, 2017 | Published: 06:39 GMT, Mar 28, 2017 |
0 Comments
1388
icon_com
This post was written by : Risha
kol

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஆய்வு செய்துவந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 21 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழு, இறுதிப் போட்டிகளை நடத்துவதற்காக கொல்கத்தா சோல்ட் லேக் மைதானத்தை தெரிவுசெய்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிகளுக்கான பயிற்சியில் சர்வதேச அணிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg