Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்போரில் அரசாங்கம் பிளவடைந்தால் கூட்டு எதிரணியின் ஆதரவு மைத்திரிக்கு!

In இலங்கை
Updated: 07:55 GMT, Mar 28, 2017 | Published: 06:42 GMT, Mar 28, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Ravivarman
wasudewa-new

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பனிப்போரில் அரசாங்கம் பிரிவடைந்தால் கூட்டு எதிரணியின் ஆதரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பனிப்போர் நடைபெற்று வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இருப்பதாக அறிகின்றோம். அவ்வாறு இருந்தால் அது மகிழ்ச்சியான விடயமே. உட்பூசல் வெடித்து நல்லாட்சி அரசு கவிழ்ந்தால் நாம் ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் இருந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்” என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg