Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக முதலமைச்சரை தகுதி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

In இந்தியா
Updated: 07:58 GMT, Mar 28, 2017 | Published: 07:01 GMT, Mar 28, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Elakkiya
edapadi

தமிழக முதலமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க பிரமுகருமான ஆணழகன் தாக்கல் செய்துள்ள குறித்த முறைப்பாட்டு மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஆட்சி நடத்தும் முதல் அமைச்சர் மற்றும் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் மற்றும் காமராஜ் ஆகிய நான்கு அமைச்சர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நான்கு அமைச்சர்களும் சிறையிலுள்ள சசிகலாவை நேரில் சென்று பார்த்ததாகவும் இந்த நடைமுறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 188ஆவது சரத்திற்கும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்யும்போது எடுத்த ரகசியகாப்பு உறுதிமொழிக்கும் எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர்களின் மேற்படி செயல்களுக்கு முதலமைச்சர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் தான் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ள மனுதாரர், இதில் நீதிமன்றம் தலையிட்டு தனது மனுவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg