Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டார் ஜடேஜா

In கிாிக்கட்
Updated: 10:56 GMT, Mar 28, 2017 | Published: 06:56 GMT, Mar 28, 2017 |
0 Comments
2383
icon_com
This post was written by : Risha
jadeja-rtr-7591

தர்மசாலாவில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக அரை சதங்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

ஏற்கனவே விராட் கோஹ்லி, விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோரும் ஆறு அரை சதங்களை அடித்துள்ள நிலையில், அவர்களுடன் தற்போது ஜடேஜாவும் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இப்பட்டியலில், இதுவரை 12 சதங்களை அடித்துள்ள புஜாரா முதல் இடத்தில் திகழ்கின்றார்.

அதேவேளை, இந்த காலப்பகுதியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலிலும் ரவீந்திர ஜடேஜா 2ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தர்மசாலா போட்டியில், ஜடேஜா 63 ஓட்டங்களை குவித்த அதேவேளை, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg