Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திம்புள்ள லயன் குடியிருப்பில் திடீர் தீ விபத்து: மூன்று வீடுகள் சேதம்

In இலங்கை
Published: 07:25 GMT, Mar 28, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சென். கிளயார்  டெவோன் பிரிவு தோட்ட குடியிருப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

18 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு முற்றாகவும், ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் எரிந்துள்ளன. முற்றாக எரிந்த வீட்டில் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

எனினும் இந்த வீடுகளில் குடியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்காலிகமாக, எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக அயலவர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது குறித்த  வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை எனவும், அயலவர்களின் உதவியுடன் ஏனைய வீடுகளுக்கு மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC01799 DSC01787 DSC01801

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg