Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் நடவடிக்கைகள் விரக்தியடையச் செய்துள்ளன: நிக்கோலா கருத்து

In
Published: 07:39 GMT, Mar 28, 2017 |
0 Comments
1278
icon_com
This post was written by : Sylviya

பிரெக்சிற் நடவடிக்கைகள் தன்னை மேன்மேலும் விரக்தியடையச் செய்துள்ளன என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கொலா ஸ்ரேர்ஜன் (Nicola Sturgeon) தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என நிக்கோலா தெரிவித்த போது அதற்கு பதிலளித்த பிரதமர் மே, “கருத்துக்கணிப்பு நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல” என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் இன்று (செவ்வாய்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ள நிலையிலேயே நேற்றைய சந்திப்பு நடைபெற்றது.

இன்றைய விவாதத்தின் பின்னர், ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு நிக்கோலா ஸ்ரேர்ஜனுக்கு மேலும் ஆதரவு கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg