Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியது பிரெக்சிற்

In
Updated: 09:37 GMT, Mar 28, 2017 | Published: 08:36 GMT, Mar 28, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Sylviya
07

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான நடவடிக்கையானது, பிரித்தானியாவில் உள்ள சுமார் 3 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியதன் பின்னர், அங்குள்ள ஒன்றிய பிரஜைகளின் வதிவிட உத்தரவாதம் தொடர்பில் இதுவரை திட்டவட்டமாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படாததால் பல ஒன்றிய நாட்டவர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜேர்மனிய பேராசிரியர் ஒருவர், “கடந்த 28 வருட காலமாக நான் பிரித்தானியாவில் வசித்து வருகின்றேன். என்னால் சரளமாக ஆங்கிலம் கதைக்க முடியும். எனது தொழிலை நிதானமாக மேற்கொண்டு வருகின்றேன். அதற்குரிய பாராட்டும் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான் இந்த நாட்டில் வேண்டப்படாத ஒருவர் எனும் எண்ணம் வந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் காரணமாக குறித்த பேராசிரியர் மீண்டும் ஜேர்மனிக்கு செல்வதில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள கிழக்கு ஐரோப்பிய மூலவள மையத்தின் தலைமை நிர்வாகி இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “பிரித்தானியாவில் நாங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றோம், தொழில் புரிந்தோம் என்பவற்றை நிரூபிப்பதற்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்னரான தொலைபேசி உண்டியல்களை ஆதாரமாக சமர்ப்பிக்குமாறு கேட்டால் அது எவ்வாறு சாத்தியமாகும்? அவ்வளவு பழைமையான கட்டண உண்டியல்களை யார்

பிரெக்சிற் நடவடிக்கைகள் பிரதமர் தெரேசா மேயின் தலைமையில் நாளை (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg