Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இந்தியாவின் குடிமக்களே: ராமதாஸ்

In இந்தியா
Updated: 08:54 GMT, Mar 28, 2017 | Published: 08:21 GMT, Mar 28, 2017 |
0 Comments
1219
This post was written by : Elakkiya

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயிகளும் இந்தியாவின் குடிமக்கள் அல்லவா என்பது மத்திய அரசிடமிருந்து விடைகாணப்பட வேண்டிய வினா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேற்படி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “இந்தியாவில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. தமிழகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மாத்திரம் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதே இதற்கு காரணமாகும்.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்திவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு காதுகொடுத்து கேட்கவில்லை. அவர்களை நேரில் சந்திக்கவும் மறுக்கின்றது. விவசாயிகளை சந்திக்க மறுக்கும் அளவுக்கு தமிழக உழவர்களை தீண்டத்தகாதவர்களாக மத்திய அரசு பார்க்கின்றது. சோறு கொடுக்கும் இவர்களை இவ்வாறு அவமதிப்பது நியாயமானதல்ல.

அதேபோன்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காரணம்காட்டி நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை சற்றும் மதிக்காது மத்திய அரசு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு சார்ந்த விடயங்களில் மாத்திரம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுவது ஏன்? தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களும், உழவர்களும், பொதுமக்களும் இந்தியாவின் குடிமக்கள் அல்லவா? அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg