Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தர்மசாலா போட்டியின் கசப்பான தருணங்களுக்கு மன்னிப்பு கோரும் ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 08:54 GMT, Mar 28, 2017 | Published: 08:14 GMT, Mar 28, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Risha
Steven Smith, Virat Kohli

தர்மசாலாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இடம்பெற்ற சில கசப்பான விடயங்களுக்கு மன்னிப்பு கோருவதாக, அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரை இந்திய அணி 2:1 என கைப்பற்றியது. இந்நிலையில், அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ஸ்மித் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஸ்மித், “சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்துவிடுகிறேன். அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 70 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதனாலேயே நாம் பின்னடைவை எதிர்நோக்கினோம்.

உமேஷ் யாதவ் சிறப்பான முறையில் பந்துவீசி எங்களை கட்டுப்படுத்திவிட்டார். எங்களைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமான தருணம். இந்த தொடரை 4-0 என்றச் கணக்கில் இந்தியா வென்றுவிடும் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தோம்” என்றார்.

நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சில் ஹசில்வுட் அடித்த பந்தை முரளிவிஜய் பிடித்தார். அப்போது பந்து தரையில் பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது நடுவரிடம் வினவப்பட்டது. இதன்போது பந்து தரையில் பட்டதாக தொிவிக்கப்பட்டு ஹசில்வுட் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதனால் ஆவேசமடைந்த ஸ்மித், முரளி விஜய்யை நோக்கி தவறான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்திருந்தார். இது போன்ற பல்வேறு சர்ச்சைக்குாிய சம்பவங்கள் இத்தொடாின் போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg