Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாணத்தில் 4580 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதார சேவை பணிப்பாளர்

In இலங்கை
Updated: 09:39 GMT, Mar 28, 2017 | Published: 08:45 GMT, Mar 28, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Ravivarman
Dr. K. Muruganantham

கிழக்கில் டெங்கு நோயினால் 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும், இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் டெங்கு நோய் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“டெங்கு நோய் காரணமாக 18 பேர் கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 9 பேரும் குறிஞ்சாக்கேணி பிரதேச சபைப்பிரிவுக்குள் 3 பேரும், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பிரதேசங்களில் தலா ஒன்றுமாக 15 பேர் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப்பிரதேசம், காத்தான்குடி, செங்கலடி பிரதேங்களிலுமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 2680 நோயாளிகளும் மட்டக்களப்பில் 960 நோயாளிகளும் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 827 நோயாளிகளும் அம்பாறை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 113 நோயாளிகளுமாக 4580 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg