Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசின் துணையுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 10:04 GMT, Mar 28, 2017 | Published: 09:44 GMT, Mar 28, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Elakkiya
MK Stalin

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசின் துணையுடன் மத்திய அரசு நிறைவேற்றவுள்ளதாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று (திங்கட்கிழமை) கைச்சாத்தாகியுள்ள நிலையில் இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நெடுவாசல் கிராம மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகளின் கவலையையும், எதிர்காலத்தில் விவசாயமே அழிந்துவிடும் என்ற அச்சத்தையும் கவனத்தில் கொண்டு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுமாறும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg