Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவூதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் 5 மாதங்களின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

In இலங்கை
Published: 08:55 GMT, Mar 28, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Vithushagan
மலையகத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகசச் சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில் அவரது சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான பழனியாண்டி கற்பகவள்ளி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.  தனது குடும்ப வறுமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியாவுக்குச் சென்று றியாத் பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர், சவூதி அரேபியாவின் றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி உயிரிழந்ததாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளை தொடர்புகொண்டு, உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டுள்ளனர்.

எனினும், 5 மாதங்கள் கடந்த பின்னர் குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு  நேற்று (திங்கட்கிழமை) இரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தபோது மாரடைப்பு காரணமாகவே இப்பெண் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழை சவூதி அரேபியா நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பில் மீண்டும் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த பெண்ணின் இடுப்பு  மற்றும் கழுத்துப் பகுதிகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவரது உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

மலையக தோட்டப் பகுதியிலிருந்து குடும்ப பிரச்சினை மற்றும் வறுமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கென செல்லும் பெண்களின் நிலை பல சந்தர்ப்பங்களில் இவ்வாறே அமைகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கென செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed (7) unnamed (8)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg