Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணித் தலைவர் சாதனை

In கிாிக்கட்
Updated: 10:55 GMT, Mar 28, 2017 | Published: 08:50 GMT, Mar 28, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Risha
kane

விரைவாக ஐயாயிரம் ஓட்டங்களை கடந்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நிலைநாட்டியுள்ளார்.

வில்லியம்சன் 110 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் சக நாட்டு வீரரான மார்ட்டின் குரோவ் 177 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

ஹெமில்டனில் நடைபெற்ற தென்னாபிரிக்காவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வில்லியம்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இது அவர் அடித்த 17ஆவது சதமாகும். இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சகநாட்டு வீரரான மார்ட்டின் குரோவுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg