Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியின் அரசியலமைப்பு தொடர்பில் பெல்ஜிய மக்கள் வாக்களிப்பு

In ஐரோப்பா
Updated: 09:41 GMT, Mar 28, 2017 | Published: 08:53 GMT, Mar 28, 2017 |
0 Comments
1260
icon_com
This post was written by : Sylviya
08

பெல்ஜியத்தில் உள்ள துருக்கி இனத்தவர்கள் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு விரிவான அதிகாரங்களை கையளிப்பது தொடர்பிலான கருத்துக்கணிப்பில் வாக்களித்துள்ளனர்.

குறித்த வாக்களிப்பு நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற கருத்துக்கணிப்பு ஒன்று நேற்று பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் நடத்தப்பட்டது.

பெல்ஜியத்தின் அன்ட்வர்ப் (Antwerp) மற்றும் பிரஸ்சல்ஸல் (Brussels) ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட குறித்த கருத்துக்கணிப்பில் வாக்களிக்கும் பொருட்டு பெருந்திரளான மக்கள் காத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கிருந்த பெருமளவானோர் துருக்கி ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே வாக்களித்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி துருக்கியிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg