Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவுடனான வெற்றி, இந்திய அணியின் முதிர்ச்சியை வெளிகாட்டியுள்ளது: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 10:02 GMT, Mar 28, 2017 | Published: 09:36 GMT, Mar 28, 2017 |
0 Comments
1262
This post was written by : Risha

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான வெற்றியானது இந்திய அணி வீர்ர்களின் உறுதியையும் முதிர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவை 2-1 என்று வீழ்த்தி, இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “இதுவரை எங்களது சிறந்த தொடர் வெற்றி இதுவே. நம் வீரர்களும் தொடர்ந்து வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற்றனர். இது நம் வீர்ர்களின் உறுதியையும் முதிர்ச்சியையும் காட்டுகிறது. ரஹானே அணியை உண்மையில் சிறப்பாக வழி நடத்தினார்.

ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடியமையே இந்த வெற்றிக்கு காரணம். வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போட்டியின் மிகுந்த பலமாக இருந்தனர். சில வாரங்களில் நானும் பூரண உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்புவேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg