Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: மூவர் காயம்

In ஐரோப்பா
Updated: 11:53 GMT, Mar 28, 2017 | Published: 10:12 GMT, Mar 28, 2017 |
0 Comments
1313
icon_com
This post was written by : Sylviya
09

பரிஸ் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவரின்  தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சீன நாட்டவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) பொலிஸ் நிலையம் முன்பாக பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்தே பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பலர் இதுவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த சீன நாட்டவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய கத்தியொன்றால் தாக்கினார் எனவும் அதனாலேயே அவர் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படும் கருத்தை, குறித்த சீன நாட்டவரின் குடும்பம் முற்றாக மறுத்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் வாழும் சீன நாட்டவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

56 வயது மதிக்கத்தக்க சீனப் பிரஜையான ஷவோயோ (Shaoyo) நேற்று முன்தினம் இரவு பரிஸ் நகரில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg