Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீரபுரம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சத்தியலிங்கம்

In இலங்கை
Updated: 10:50 GMT, Mar 28, 2017 | Published: 10:06 GMT, Mar 28, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Ravivarman
ga2

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீரபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் காணி அத்துமீறல் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் வேண்டுகோளிற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர், வெங்கலச்செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகங்களின் காணிக்கிளைகளின் காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மற்றும் காணிக்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு காணியை வழங்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டன.

வீரபுரம் கிராமத்தில் 1996களில் 400 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இக் குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினூடாக வீட்டுத்திட்டமும், குடியிருப்பதற்கு தலா 6 பரப்பு காணியும், வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வாரு குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் மேட்டுக்காணிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன.

அண்மையில் இவ்வாறு வழங்கப்பட்டிருந்த மேட்டுக்காணிகளை அயல் கிராமங்களில் உள்ள பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்த அத்துமீறிய காணி சுவீகரிப்பு முயற்சியானது அரசாங்க அதிபருடாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ga1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg