Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே. நகர் தொகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

In இந்தியா
Updated: 11:34 GMT, Mar 28, 2017 | Published: 10:26 GMT, Mar 28, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Elakkiya
201703281506541641_flag._L_styvpf

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பறக்கும் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்.கே. நகர் தொகுதியில் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அருகில் இன்று காலை சகல வாகனங்களும் சோதனையிடப்பட்டன. கட்சி கொடிகளுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழையும் அனைத்து கார்களும் சோதனை செய்யப்பட்டன. அத்துடன், கார்களில் கட்டப்பட்ட கட்சி கொடிகளை அகற்றும் பணியும் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இனிவரும் நாட்களிலும் பறக்கும் படையின் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg